ஹாக்கியில் பெல்ஜியத்துடன் டிரா,கோல் அடித்து அசத்திய வந்தனா கட்டாரியா

ஹாக்கியில் பெல்ஜியத்துடன் டிரா,கோல் அடித்து அசத்திய வந்தனா கட்டாரியா

இந்திய மகளிர் ஹாக்கி அணி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டென் போஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்த இந்திய மகளிர் அணி தனது 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் ஜூனியர் ஆடவர் அணியுடன் மோதியது. அன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டம் மிக நெருக்கமான போராட்டமாக 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.19-வது நிமிடத்தில் ஸ்டான் பிராங்கி கோல் அடிக்க பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.

36-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நிக்கி பிரதான் அடித்த கோலால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையை எட்டியது.43-வது நிமிடத்தில் மேத்யூ டி லாட் அடித்த பீல்டு கோலால் பெல்ஜியம் 2-1 என முன்னிலை வகிக்தது. ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் எஞ்சிய நிலையில் இந்தியாவின் வந்தனா கட்டாரியா கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது.