பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி

8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன.இந்த நிலையில் பிரிஸ்டலில் நேற்று நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மிகவும் வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பூனம் ரவுத், மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள். மந்தனா 3 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து கேப்டன் மிதாலி ராஜ், பூனம் ரவுத்துடன் இணைந்தார். இருவரும் ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 166 ரன்னாக உயர்ந்த போது நிலைத்து நின்று ஆடிய மிதாலி ராஜ் (69 ரன்கள்) கிறிஸ்டன் பீம்ஸ் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்..