மோடியை சந்தித்த இந்திய ஜூனியர் கால்பந்து அணி

மோடியை சந்தித்த இந்திய ஜூனியர் கால்பந்து அணி

புதுடெல்லி: 17-வது ஜூனியர் உலகக்கோப்பை (17 வயதுக்கு உட்பட்டோர்) கால்பந்து போட்டி கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்றது. கொல்கத்தாவில் நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது

இதற்கிடையே, சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) போட்டிகள் அமைப்பு குழு தலைவர் ஜெமி யார்ஜா கூறுகையில், ‘‘அதிக ரசிகர்கள் நேரில் கண்டு களித்த ஜூனியர் உலக கோப்பை தொடராக இது இருக்கப் போகிறது. இந்த போட்டியை இந்தியா அற்புதமாக நடத்தி இருக்கிறது. 

இந்நிலையில், ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய இந்திய அணியினர் இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களிடம் பேசிய மோடி, ‘‘கால்பந்தில் இந்தியா சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. தோல்வியை கண்டு துவள வேண்டாம். ஒருவரது விளையாடும் திறன் அவர்களது தனித்திறமையை வளர்க்க உதவும். மன உறுதியை அதிகரிக்கும்’’ என கூறினார்.