அஞ்சல் துறை கபடி போட்டி நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்கம்

அஞ்சல் துறை கபடி போட்டி நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்கம்

இந்திய அஞ்சல் துறையின் 31-வது அகில இந்திய கபடி போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் தலைவர் தேவாரம் போட்டியை தொடங்கி வைத்தார்.வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட் 10 மாநிலங்களை சேர்ந்த அஞ்சலக அணிகள் கலந்து கொண்டுள்ளன.நிகழ்ச்சியில் அர்ஜூனா விருது பெற்ற வீரர் பி.கணேசன், மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் சாரதா சம்பத், சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆனந்த், அஞ்சல் மற்றும் வணிக வளர்ச்சித் துறை தலைவர் வெங்கடேஸ்வரலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.