இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் :செரீனா அதிர்ச்சி தோல்வி

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் :செரீனா அதிர்ச்சி தோல்வி

இண்டியன்வெல்ஸ்: அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தனது தங்கையுமான செரீனா வில்லியம்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

1 மணி 26 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் செரீனாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 29-வது முறையாக செரீனாவை சந்தித்த வீனஸ் வில்லியம்ஸ் அதில் பெற்ற 12-வது வெற்றி இதுவாகும்.