ஐசிசி:சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை விராட் கோலி பெற்றார்

ஐசிசி:சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை விராட் கோலி பெற்றார்

2016 - 17 ஆண்டுக்கான ஐசிசி ஆண்டு விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் கோலி பெற்றுள்ளார்.செப்டம்பர் 21, 2016 முதல் 2017 இறுதி வரை வீரர்களின் ஆட்டம் கணக்கெடுக்கபப்ட்டது.

இதில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,203 ரன்களை (77.80 சராசரி) குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் அடங்கும். அதே காலகட்டத்தில் ஒரு நாள் போட்டிகளில் 1,818 ரன்களை குவித்துள்ளார் (82.63 சராசரி). இதில் 7 சதங்கள் அடங்கும். டி20 போட்டிகளில் 299 ரன்களை எடுத்துள்ளார். மேலும், இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை எட்டியதும் விராட் கோலி தலைமையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.