உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி - பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி - பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகேனா யமகுச்சியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து.உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த அகேனா யமகுச்சியை எதிர் கொண்டார்.இதில் பிவி சிந்து 21-16, 24-22  என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

தங்கப் பதக்கத்துக்கான இறுதி போட்டியில் பிவி சிந்து ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.