இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: ஜப்பான் வீராங்கனையிடம் பிவி சிந்து தோல்வி

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: ஜப்பான் வீராங்கனையிடம் பிவி சிந்து தோல்வி

இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,  4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் யமாகுச்சியுடன் பலப்பரீட்சை நடத்தினார்.  யமாகுச்சிக்கு எதிராக 14 ஆட்டங்களில் மோதிய சிந்து அதில் 10-ல் வெற்றி கண்டிருந்ததால் ஆட்டத்தில் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. 

இன்றை ஆட்டம் தொடங்கியதும் பிவி சிந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல்செட்டில் 11-8 என முன்னிலைப் பெற்றிருந்தார். இதனையடுத்து யமாகுச்சியின் வேகமான ஆட்டம், செட்டை திசை மாற்றியது. 21-15 என்ற கணக்கில் முதல் செட் யமாகுச்சியிடம் சென்றது. இரண்டாவது செட்டையும் 21-16 என்ற கணக்கில் பெற்று யமாகுச்சி, சிந்துவை தோற்கடித்து பட்டம் வென்றார்.