சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் பந்துவீச்சில் இங்கிலாந்து திணறல்

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் பந்துவீச்சில் இங்கிலாந்து திணறல்

கார்டிப்: இங்கிலாந்தில் நடந்து வரும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு இடையே கார்டிப்பில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சப்ராஸ் அகமது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இங்கிலாந்து நிதனாமாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில் பந்துவீச்சில் தன்னுடைய பலத்தை பாகிஸ்தான் காட்ட முயற்சித்தது. இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரன் சேர்க்கும் முனைப்பில் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் முதல்விக்கெட் 5.5 ஆவது ஓவரில் போனது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹாலெஸ் 13 ரன்களில் ரம்மன் ரயீஸ் பந்துவீச்சில் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுபுறம் பேர்ஸ்டோ நிதானம் காட்டினார். அவருடன் ரூட் களமிறங்கினார். இருவரும் 40க்கும் அதிகமான ரன் களை எடுத்து அவுட் ஆனார்கள். விக்கெட் விபரம்:- 1-34 (ஹாலெஸ், 5.5 ஓவர்கள்), 2-80 (பேர்ஸ்டோ, 16.3 ஓவர்கள்), 3-128 (ரூட், 27.3 ஓவர்கள்), 4-141 (மோர்கன், 31.4 ஓவர்கள்) (பட்லர், 34.1 ஓவர்கள்) பாகிஸ்தான் அணி பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் இங்கிலாந்து அணிடைய திணறச்செய்து வருகிறது. 

இங்கிலாந்து அணி 35 ஓவர்களுக்கு  5 விக்கெட்களை இழந்து 149 ரன்களுடன் திணறி வருகிறது.மொயீன் அலி ஒரு ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 8 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். லீக் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இங்கிலாந்து தான். லீக் சுற்றில் வங்காளதேசம் (8 விக்கெட் வித்தியாசம்), நியூசிலாந்து (87 ரன்), ஆஸ்திரேலியா (40 ரன்) ஆகிய அணிகளை புரட்டிஎடுத்து இங்கிலாந்து கம்பீரமாக அரைஇறுதிக்கு வந்திருக்கிறது. ஆனால் இப்போது பாகிஸ்தானிடம் திணறி வருகிறது. பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் மிக வலுவாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் மிடில் வரிசையில் நிலவும் சீரற்ற தன்மை பலவீனமாக பார்க்கப்படுகிறது.