ஐ.பி.எல்.போட்டி: பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு

 ஐ.பி.எல்.போட்டி: பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். 

பெங்களூர் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கிய பஞ்சாப் அணி தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 19.2 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 47 ரன்னும், கேப்டன் அஷ்வின் 33 ரன்னும், கருண் நாயர் 29 ரன்னும் எடுத்தனர்.

பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், வோக்ஸ், கேஜ்ரோலியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், மெக்கல்லம் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே மெக்கல்லம் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டி வில்லியர்ஸ் களமிறங்கினார். பொறுப்புடன் ஆடிய டி காக் 34 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய சர்பிராஸ்கான் டக் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட்டுக்கு 87 ரன் எடுத்திருந்தது.

அவரை தொடர்ந்து மந்தீப் சிங் களமிறங்கினார். அவர் டி வில்லியர்சுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 40 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 57 ரன்னும், மந்தீப் சிங் 22 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.