உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் அமித் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

 உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் அமித் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 52 கிலோ உடல் எடைப்பிரிவில் கசகஸ்தான் வீரர் சாகேன் பிபோஸினோவை 3-2 என்ற புள்ளி கணக்கில் அமித் பன்ஹால் தோற்கடித்தார். நாளைய இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாக்கோபிடின் சோய்ராவை அமித் பன்ஹால் எதிர்கொள்கிறார். 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுஷிக் வெண்கலம் வென்றார்.