இந்திய அணி தோல்வி அடைந்ததில் ஒரே நாளில்  ரூ.100 கோடிக்கும் மேல் நஷ்டம்!

இந்திய அணி தோல்வி அடைந்ததில் ஒரே நாளில்  ரூ.100 கோடிக்கும் மேல் நஷ்டம்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இறுதி வரை போராடியும் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள சட்டா பஜார் என்ற சட்ட விரோத சூதாட்ட சந்தையில், நேற்றைய போட்டியின்போது இந்தியாவுக்கு ஆதரவாக பந்தயம் கட்டியதில் பல கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளனர். 

இது குறித்து பந்தயத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறியதாவது:

ஆட்டத்தின் சூழ்நிலைகளை பார்த்து யார் வெற்றிப் பெறுவர், தோற்பர் என கூறி, குறிப்பிட்ட பணத்தை அந்த அணியின் பெயரில் பந்தயத்தில் வைப்பர். நியூசிலாந்துடனான 2 நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பானதாக இருந்தது.நியூசிலாந்து அணி நேற்று முன்தினம் ஆடிய ஆட்டத்தில் இருந்தே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி பந்தயம் சென்றது. நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோலி, கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா ஆகியோர் வெளியேறினர். 

இதனால் சிலர் நியூசிலாந்துதான் வெற்றிப் பெறும் என பந்தயம் கட்டினர். பின்னர் டோனி-ஜடேஜா களமிறங்கியவுடன் வெற்றி இந்திய அணிப்பக்கமே என பலரும் பந்தயம் கட்டினர். எதிர்ப்பாராத விதமாக டோனி அவுட் ஆனார். எஞ்சிய நம்பிக்கையும் மொத்தமாக சிதைந்தது. இந்திய அணியை நம்பி பணத்தை கட்டிய பலரும் ஏமாற்றமடைந்தனர். இந்த தோல்வியால் பந்தயம் கட்டியவர்களுக்கு  ரூ.100 கோடிக்கும் மேல் நஷ்டமானது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.