தங்க மங்கை பி.டி.உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்...

தங்க மங்கை பி.டி.உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்...

பெண் தடகள வீராங்கனைகளுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்த பி.டி.உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஐஐடி கான்பூர் முடிவு செய்துள்ளது.

வேகமாக ஓடி வருபவர்களை 'ஏன் இப்படி ஓடி வர.... பெரிய பி.டி.உஷானு நினைப்பா?' என்ற வாக்கியம் நம்மிடம் மிகவும் பிரபலம். அவ்வாறு ஓட்டப்பந்தயத்துடன் ஒன்றிப்போன பி.டி.உஷா உலகளவில் இந்தியாவுக்கு பலமுறை பெருமையை தேடி தந்திருக்கிறார். தான் சார்ந்த துறைகளில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து அந்தத் துறையின் வளர்ச்சிக்காகப் பங்காற்றியவர்களுக்காக கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அ

தன்படி ஐஐடி கான்பூர் தடகள விளையாட்டுகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தங்க மங்கை பிடி உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நாட்டிற்கு பல பதக்கங்களை பெற்று பெருமையை தேடித்தந்த பிடி.உஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே தந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் காலம் தாழ்ந்து இந்த பட்டம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.