கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் கவுதம் கம்பீர்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் கவுதம் கம்பீர்

இந்திய அணியின் மூத்த வீரரும், உலகக்கோப்பை ஹீரோவுமான, கவுதம் கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.

தொடக்க ஆட்டக்காரரான  கவுதம் கம்பீர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல்11-ம் தேதி டாக்காவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

டெஸ்ட் போட்டியில் 2004-ம் ஆண்டு மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கம்பீர் அறிமுகமானார். ஏறக்குறைய இந்திய அணிக்காக 13 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளார் கம்பீர். டி20 போட்டியில் 2007-ம் ஆண்டு  அறிமுகமானார்.

இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4,154 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதங்கள், 22 அரை சதங்கள் அடங்கும். 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 5,238 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதில் 11 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும். மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராக கம்பீர் வலம் வந்து, எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். 37 டி20 போட்டிகளில் விளையாடி 932 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 7 அரை சதங்கள் அடங்கும்.