ஐபிஎல் கிரிக்கெட்:  டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்:  டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.இரு அணி கேப்டன்கள் முன்பு டாஸ் சுண்டப்பட்டது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்றார். டாஸ் வென்ற அவர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இன்றைய போட்டியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:
 
மும்பை அணி வீரர்கள்:

ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கிரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருணாள் பாண்டியா, அல்ஜாரி ஜோசப், ராகுல் சஹார், ஜேசன் பெஹ்ரண்டப், ஜஸ்பிரித் பும்ரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்:

அஜிங்கியா ரகானே, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திரிபாதி, லிவிங்ஸ்டோன், கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர், ஹ்ச்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனத்கட், தவால் குல்கர்னி.