வீராட் கோலி, அனுஷ்கா சர்மாவை கரம் பிடிக்கிறார்

வீராட் கோலி, அனுஷ்கா சர்மாவை கரம் பிடிக்கிறார்

வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து  வருகிறார். இந்த நிலையில்  வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைறும் எனகூறப்பட்டது.   இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள்  மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள் கிறார்கள்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.டிசம்பர் 21 ம் தேதி மும்பையில் நடைபெறும் வரவேற்புக்கு இந்த ஜோடி அனைத்து நண்பர்களை அழைக்கும்.

அனுஷ்காவின் திருமண ஆடைகளை  ஆடை வடிவமைப்பாளரான சப்பாசிச்சி முகர்ஜி வடிவமைத்து உள்ளார். கடந்த வாரம் அனுஷ்கா சர்மாவின் வீட்டிற்கு அவர் வந்து சென்று உள்ளார்.

திருமணம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறுகிறது. ஆனால் இது குறித்து இருவர் தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை.