ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலி

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலி

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 83 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 75 ரன்கள் அடித்தார். இந்த 75 ரன் மூலம் விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 206 ஒருநாள் போட்டியில் 198 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9423 ரன்கள் குவித்துள்ளார்.

அவர் 9378 ரன்களை தாண்டும்போது அசாருதீனையும், 9420 ரன்களை தாண்டும்போது கிறிஸ் கெய்லையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார். சர்வதேச அளவில் 16-வது இடத்தில் இருக்கும் விராட் கோலி, இந்திய அளவில் 5-வது இடத்தில் உள்ளார்.