மும்பை ரிஷப் ஷா மேற்காசிய அளவிலான செஸ் போட்டியில் 2 வெண்கல பதக்கம் வென்று சாதனை

மும்பை ரிஷப் ஷா மேற்காசிய அளவிலான செஸ் போட்டியில் 2 வெண்கல பதக்கம் வென்று சாதனை

மும்பை:இலங்கையில் உள்ள வாஸ்கடுவாவில் 2-வது மேற்காசிய அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இதில் மும்பையைச் சேர்ந்த ரிஷப் ஷா என்ற 14-வயது சிறுவன் 2 பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளான்.

14-வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு மற்றும் பிளிட்ஸ் முறை ஆகிய இரண்டு பிரிவிலும் பதக்கம் வென்றுள்ளான். 14-வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5 புள்ளிகளும், பிளிட்ஸ் முறையில் 4.5 புள்ளிகளும் பெற்று மூன்றாம் இடத்தை கைப்பற்றினான். இலங்கையைச் சேர்ந்த ஜி.எம்.எச். திலகரத்னே 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமத் பகத் ரகுமான் 5.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.