வேகப்பந்து வீச்சாளரான  சச்சினின் மகனுக்கு மும்பை U-19 அணியில் இடம்

வேகப்பந்து வீச்சாளரான  சச்சினின் மகனுக்கு மும்பை U-19 அணியில் இடம்

சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் இடது கை வேகப்பந்து வீச்சுடன் பேட்டிங் செய்யக்கூடியவர்.அர்ஜூன் தற்போது 19 வயதிற்குட்பட்டோருக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார். மறைந்த ஸ்ரீ ஜே.ஒய். லெலே நினைவாக நடைபெறும் 5-வது அனைத்திந்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான இன்விடேசனல் ஒருநாள் தொடர் வருகிற 16-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான மும்பை அணியில் 17 வயதாகும் அர்ஜூன் இடம்பிடித்துள்ளார்.இந்த தொடரை பிசிசிஐ நடத்தவில்லை என்றாலும், சிறப்பாக செயல்பட்டால் இந்தியாவின் 19 வயதிற்குபட்டோருக்கான இந்திய அணியில் அர்ஜூன் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.