மகளிர் உலககோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா நாளை மோதுகிறது

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா நாளை மோதுகிறது

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 24-ந் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் 8 நாடுகள் பங்கேற்றன. இதன் ‘லீக்’ ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிவடைந்தன.இதன் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின.3 முறை உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப்போட்டியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணி லீக் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்தது. பாகிஸ்தானை 107 ரன் வித்தியாசத்திலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலுதென் ஆப்பிரிக்கா அணி ‘லீக்’ ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 4 ஆட்டங்களில் வென்று இருந்தது. 2 போட்டியில் தோற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. 2-வது அரை இறுதி ஆட்டம் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியா- நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதுகின்றன.