தமிழகத்தில் 132 சதவீதம் கூடுதல் மழை

தமிழகத்தில் 132 சதவீதம் கூடுதல் மழை

சென்னை : கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இயல்பை விட 132 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.தமிழக பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியதாவது:
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக ஒடிசா நோக்கி நகர உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த வாரத்தில் தமிழகத்தின் 29 மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலாக 132 சதவீத மழை பெய்துள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் புயல் காற்றுடன் மழை பெய்யும். இதற்கு எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.