“ஒகி” லட்சத்தீவில் கரை ஒதுங்கிய புதுச்சேரி மீனவர்கள் 22 பேர் மீட்பு

“ஒகி” லட்சத்தீவில் கரை ஒதுங்கிய புதுச்சேரி மீனவர்கள் 22 பேர் மீட்பு

புதுச்சேரி: புதுவை நரம்பை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கந்த நாதன், அருள்ராஜ், ஆறு முகம், ஆனந்த், மணிகண்ட பிரபு ஆகியோர் கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள் ஒகி புயலில் சிக்கினார்கள்.

இதனால் இழுத்து செல்லப்பட்ட அவர்களது படகு லட்சத்தீவில் கரை ஒதுங்கியது. இதைத்தொடர்ந்து பத்திரமாக மீட்கப்பட்ட அவர்கள் புதுவைக்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களை நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணராவ், கந்தசாமி ஆகியோர் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.