இனி  சாலையோர பெட்டிக் கடைகள் வைக்கவும்  ஆதார் அவசியம்...

  இனி  சாலையோர பெட்டிக் கடைகள் வைக்கவும்  ஆதார் அவசியம்...

சென்னையில் சாலையோரங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி கோரி வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சென்னையில் சாலையோரம் பெட்டிக் கடைகள் வைப்பதற்கு கண்டிப்பாக ஆதார் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. 

‘ஒரு கடைக்கு அனுமதி பெற்றவர்கள் மீண்டும் வேறு ஒரு இடத்தில் கடைக்கு அனுமதி பெறாத வகையில் ஆதார் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் அருகே பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது. பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது’ என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அரசின் பல்வேறு துறைகளில் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு வரும்  நிலையில், தற்போது சென்னையில் பெட்டிக்கடைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.