அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்த பாக்யராஜ்

அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்த பாக்யராஜ்

அரசியலுக்கு நேரடியாக வருகிறேன். எப்போது என்று சொல்லமுடியாது. அநேகமாக, இன்னும் ஒருமாதத்தில் அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆருக்கு மிகவும் பிரியமாகவும் நெருக்கமாகவும் இருந்தவர் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ். எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, தமிழகம் முழுவதும் சென்று பாக்யராஜ், அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தார்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியை ஆதரித்தார். அதன் பின்னர், அவரே தனிக்கட்சி தொடங்கினார். நீண்டகாலத்துக்குப் பிறகு திமுகவில் சேர்ந்து அந்தக் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார்.இப்போது 'நான் அரசியலுக்கு நேரடியாக வர முடிவு செய்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, ''அரசியலுக்கு நேரடியாக வரக்கூடிய வாய்ப்பும் காலமும் நெருங்கிவிட்டது. அந்தச் சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை என கூறினார்.