கோவையில் தடையை மீறி பேரணி சென்ற அன்புமணி கைது

கோவையில் தடையை மீறி பேரணி சென்ற அன்புமணி கைது

கோவை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை கண்டித்து, தமிழக - கேரளா எல்லையில் உள்ள அணைக்கட்டி என்ற இடத்தில் பா.ம.க., மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி, கட்சி தலைவர் ஜிகே மணி, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி ஆதரவாளர்களுடன் அன்புமணி கேரளாவிற்குள் பேரணியாக செல்ல முயன்றார். இதனையடுத்து அன்புமணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்