ரவுடி பினு போலீசிடம் திடீர் சரண்

ரவுடி பினு போலீசிடம் திடீர் சரண்

சென்னை: சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடி பினு இன்று திடீரென அம்பத்தூர் போலீசில் சரணடைந்தார். போலீஸ் என்கவுண்ட்டருக்கு அஞ்சியே ரவுடி பினு போலீசில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. சென்னையின் முக்கிய ரவுடிகளில் ஒருவரான பினு கடந்த 6-ந் தேதி தமது பிறந்த நாளை 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை வரவழைத்து சென்னை அருகே மலையம்பாக்கத்தில் கொண்டாடினார்.  

அப்போது அதிரடியாக சுற்றி வளைத்த போலீசார் 76 ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ஆனால் ரவுடி கும்பலின் தலைவனான பினு உட்பட 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் தப்பி ஓடினர்.சிக்கிய கூட்டாளிகள் இவர்களை கடந்த ஒரு வாரமாக போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பினுவின் கூட்டாளிகள் அடுத்தடுத்து ஆங்காங்கே சிக்கியும் வருகின்றனர்.இந்த நிலையில் இன்று திடீரென பினு சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்துள்ளார்