துணைவேந்தர் நியமனத்தில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்: திருமாவளவன்

துணைவேந்தர் நியமனத்தில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்: திருமாவளவன்

தலித் சமூகத்தைச சேர்ந்தவர்களுக்கு துணை வேந்தர் பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் அளித்திட தேர்வுக்குழுவும், தமிழக அரசும், ஆளுநரும் முன்வரவேண்டுமென என்று தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் இருபத்தி நான்கு பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் துணைவேந்தர் பதவிகள் மற்றும் சில முதன்மை அதிகாரமுள்ள பதவிகளில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு கல்வி தகுதியும், முதுநிலைத் தகுதியும் இருந்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும்.

தற்போது, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவிகள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளன.

காலியாக உள்ள அவ்விடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கடந்த காலங்களில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் பதவிகளை நிரப்புகின்றபோது பல்வேறு குளறுபடிகள் நடந்தன. அதனையொட்டி நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.

அக்குழுவானது அரசியல் தலையீடு இல்லாமல் சமூகநீதியை பாதுகாக்கும் வகையில் தலித் சமூகத்தைச சேர்ந்தவர்களுக்கும் துணை வேந்தர் பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் அளித்திட தேர்வுக்குழுவும், தமிழக அரசும், ஆளுநரும் முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது.