டி.டி.வி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு

டி.டி.வி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது.  29 பேர் தொப்பி சின்னத்தை கோரி இருந்தனர்.  எனவே டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என தேர்தல் ஆணையம் கூறியது.  இன்று மாலை 4.15 மணியளவில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. 

பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு குலுக்கல் முறையில் தொப்பி சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மட்டும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தனர்.  குலுக்கல் முறையில் நமது கொங்கு முன்னேற்றக்கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னத்தை  தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

தொப்பி, விசில், கிரிக்கெட்பேட் சின்னங்கள் பிறருக்கு ஒதுக்கப்பட்டதால் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. விரும்பி கோரிய 3 சின்னமும் கிடைக்காத நிலையில் குலுக்கல் முறையில் பிரஷர் குக்கர் சின்னம் டிடிவி. தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.