அரசு டாக்டர் பாலாஜி, பணி நியமனத்துக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அரசு டாக்டர் பாலாஜி, பணி நியமனத்துக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, சின்னம் ஒதுக்கீடு குறித்த படிவத்தில், அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டது. இதை, அரசு டாக்டர் பாலாஜி, சான்றொப்பம் செய்தார். இந்த கைரேகை பதிவு குறித்து, சர்ச்சை கிளம்பி உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கிலும், இந்த பிரச்னை எழுப்பப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், டாக்டர் பாலாஜி, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின், உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், நாராயணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் அக்டோபர் 9ல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.