தமிழ் இருக்கைக்கு முழுமையான நிதி கிடைத்து விட்டது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழ் இருக்கைக்கு முழுமையான நிதி கிடைத்து விட்டது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அமெரிக்காவில் உள்ள பிரபலம் வாய்ந்த ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில்  தமிழை  கற்கவும், ஆய்வு செய்வதற்கும் ஏற்ற வகையில் கல்விசார் இருக்கை ஒன்றை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.  அதன்படி, அந்த பல்கலைக் கழகத்தில் கலை மற்றும் மனித அறிவியல் துறையின் கீழ் தமிழ் இருக்கை அமைய உள்ளது.

அங்கு தமிழ் இருக்கை அமைப்பதற்காக ரூ.40 கோடி அளவில் நிதி தேவைப்பட்டது.  இந்த நிதியை தமிழகத்தின் பல்வேறு தரப்பினர் மற்றும் அமைப்பினர் அரசுக்கு வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தேவையான முழுமையான நிதி உறுதி செய்யப்பட்டது என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.