அரசியல் சார்பின்றி செயல்படுவேன் :புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

அரசியல் சார்பின்றி செயல்படுவேன் :புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சென்னை: தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்றுக் கொண்டார்.ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில்,சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.தமிழக கவர்னராக பதவி ஏற்ற பிறகு பன்வாரிலால் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 'அரசியலைப்பு சட்டப்படி எனது பணியை மேற்கொள்வேன். அரசியல் சார்பின்றி செயல்படுவேன். தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்' என்றார்.