சுற்றுலா சென்ற மாணவர்கள் கோவை தடுப்பணையில் மூழ்கி பலி...

 சுற்றுலா சென்ற மாணவர்கள் கோவை தடுப்பணையில் மூழ்கி பலி...

கோவை துடியலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பயோமெடிக்கல் என்ஜினீயரிங் மற்றும் மெக்கானிக் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் 10 பேர் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறுக்கு சுற்றுலா சென்றனர்.ஆழியாறு அணையை ஒட்டி செல்லும் ஆற்றின் ஒரு பகுதியில் இருந்த தடுப்பணையில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது மாணவர்களான ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த ஸ்ரீஹரி, நாமக்கல்லை சேர்ந்த லோகேஷ். மெக்கானிக் என்ஜினீயரிங் மாணவர் நத்தத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் சேற்றில் சிக்கி தண்ணீரில் தத்தளித்தனர். இதனை பார்த்த ஆழியாறுக்கு சுற்றுலா வந்த திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த மோகன் குமார் தண்ணீரில் குதித்து மாணவர்களை மீட்க முயன்றார். ஆனால் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி 4 பேரின் உடல்களையும் மீட்டனர்.

மாணவர்கள் பலியான தகவல் அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொள்ளாச்சி விரைந்து வந்தனர். பலியான மாணவர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.