குமரி ரயில் மறியல் போராட்டத்தால் 5 ரயில்கள் ரத்து

குமரி ரயில் மறியல் போராட்டத்தால் 5 ரயில்கள் ரத்து

கன்னியாகுமரி : குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவர்கள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால் அந்த வழியாகப் பயணிக்கும் ஐந்து ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம் : 22627 திருச்சி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. 66304 கொச்சி - கன்னியாகுமரி பாசஞ்சர் ரயில் சேவை நெய்யாற்றங்கரை வரை மட்டுமே இயக்கப்படும்

. 66305 கன்னியாகுமரி - கொச்சி பாசஞ்சர் ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. 56304 நாகர்கோவில் - கோட்டயம் பாசஞ்சர் ரயில் எர்ணாகுளம் - திருவனந்தபுரம் பாதையில் இயக்கப்படும்.

56317 கொச்சுவேலி - நாகர்கோவில் இடையேயான பாசஞ்சர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ரயில்களின் பயண விபரம் : 22628 திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், தற்போது பரசாலா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.

இது மீண்டும் திருவனந்தபுரம் நோக்கி இயக்கப்பட உள்ளது. 16526 பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.