குமரி ரயில் மறியல்: ஆளுநர் சென்னை திரும்ப முடியாமல் தவிப்பு

குமரி ரயில் மறியல்: ஆளுநர் சென்னை திரும்ப முடியாமல் தவிப்பு

குமரி: வெள்ள சேதத்தை பார்வையிட குமரி மாவட்டத்துக்கு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை குளச்சல் துறைமுகத்தில் மீனவர்கள் முற்றுகையிட்டதால் அவர் குமரிக்கு திரும்பினார். இந்நிலையில் குமரியிலிருந்து சென்னை திரும்ப ரயில் மார்க்கமாக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

ஆனால் ரயில் மறியல் போராட்டத்தால் குமரி எக்ஸ்பிரஸ் இணைப்பு ரயில் வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ஆளுநர் சென்னை திரும்ப முடியாமல் தவித்தார். இதையடுத்து குமரியில் உள்ள அரசினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங், எஸ்.பி. துரை ஆகியோருடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினர்.  இதையடுத்து ஆளுநர் தனது பயண திட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். கார் மூலம் மதுரை சென்றுவிட்டு அங்கிருந்து இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்லவுள்ளார்.