தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்...மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம்

தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்...மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

இந்த நிலையில் தமிழக சட்ட சபையில் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்,  மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதன்பின்னர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதும், குரல் வாக்கெடுப்பு நடத்தி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.