குறிஞ்சி பூவால் நீலமயமான நீலகிரி

குறிஞ்சி பூவால் நீலமயமான நீலகிரி

சென்னை: குறிஞ்சி பூக்கள் நீல நிறம் உடையவை. அதுவும் இல்லாமல் இந்த பூக்கள் எப்போதுமே மலைப்பகுதிகளில்தான் காணப்படும். அதனால் இவை நீலகிரியில் அதிகமாக உள்ளது. இந்த பூக்கள் காரணமாகத்தான் நீலகிரி என்றே பெயர் வந்தது.

கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் வளரும் குணமடையதே இந்த செடிகள்.12-வருடத்திற்கு ஒருமுறைதான் இந்த பூக்கள் பூக்கும் என்பதே இதன் சிறப்பு. அதனால் உலகின் பல பகுதிகளிலிருந்து இந்த பூக்களை காண சுற்றுலா பயணிகள் வந்துவிடுவார்கள்.

நாடு முழுவதும் 200 க்கும் மேற்ப்பட்ட குறிஞ்சி மலர்கள் காணப்பட்டாலும் நீலகிரி குறிஞ்சி பூக்கள்தான் ஸ்பெஷல்!! கடந்த 2006-க்கு பிறகு இப்போதுதான் இந்த பூக்கள் மீண்டும் மலர்ந்து அனைவரையும் ஈர்க்க தொடங்கியுள்ளது. அப்பர் பவானி, சின்னகுன்னூர், கீழ்கோத்தகிரி, சோலூர், நடுவட்டம், கல்லட்டி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் நீல வண்ணமாக பூத்துக்குலுங்கி உள்ளது.