புதிய கவர்னர் பன்வாரிலால்  நாளை தமிழகம் வருகிறார்

புதிய கவர்னர் பன்வாரிலால்  நாளை தமிழகம் வருகிறார்

ஒரு ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை நியமித்து கடந்த 30-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். அசாம், மேகாலய மாநில கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார்.

புதிய கவர்னரான பன்வாரிலால் நாளை பிற்பகல் சென்னை வருகிறார். நாளை மறுநாள் (6-ந்தேதி) கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் அவர் புதிய கவர்னராக பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர்ராவ் நாளை மும்பை புறப்பட்டு செல்கிறார்.