தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தூத்துக்குடி: தவறு செய்தவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது என தூத்துக்குடியில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்- அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி வந்தார்.

அவரிடம் ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு தொடர தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளதே என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் தவறு செய்தவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. அ.தி.மு.க.வினர் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிப்போம்.

மு.க.ஸ்டாலின், தம்பிதுரை தமிழக ஆளுநரை சந்தித்துள்ளனரே என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், தேவைப்பட்டால் நானும் தமிழக ஆளுநரை சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


Loading...