ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி...  234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி...  234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

சென்னை : நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக ரஜினி அறிவித்தார்.   கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பிடி கொடுக்காமல் இருந்தார். 


ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.ரசிகர்களுடனான சந்திப்பில் கடைசி நாளான இன்று ரஜினி பேசுகையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்.

காலம் மிக குறைவாக உள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் நான் முடிவெடுப்பேன். பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை. 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா. அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன்.இப்போதைக்கு விமர்சனங்கள் செய்யப்போவதில்லை. சட்டசபை எப்போது வருகிறதோ அதற்கு முன்பு உரிய நேரத்தில் கட்சி ஆரம்பிப்போம்.