ஜெ. படத்தை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

ஜெ. படத்தை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் படத்தை திறந்துவைத்தார்.சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக்கூடாது என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தன. படத்திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தன.

அதன்படி திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டசபையில் இருந்து அகற்றக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.