வடசென்னை கடலில் உயிர் பலியை தடுக்க 7 இடங்களில் எச்சரிக்கை பலகை!

வடசென்னை கடலில் உயிர் பலியை தடுக்க 7 இடங்களில் எச்சரிக்கை பலகை!

வடசென்னை கடல் பகுதியான ராயபுரம், காசிமேடு, மீன்பிடித்துறைமுகம் நல்ல தண்ணி ஓடை குப்பம், குப்பம், திருவொற்றியூர் குப்பம், பலகைத் தொட்டிக் குப்பம், கே.வி.கே. குப்பம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிக்கும் நபர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது.இதுபற்றி போலீசார் எச்சரிக்கை விடுத்தும் கடலில் ஆபத்தை உணராமல் குளித்து வருகிறார்கள்.

இதையடுத்து உயிர் பலியை தடுக்கும் வகையில் அப்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் பகுதியில் குளிக்க போலீசார் தடை விதித்து 7 இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.போலீஸ் துணை கமி‌ஷனர் சுப்புலட்சுமி, திருவொற்றியூர் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கடலோரப் பகுதியில் ரோந்து சென்று இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அப்போது போலீசார் ரோந்து வாகனத்தின் 93940 39108, 93840 39109 ஆகிய செல்போன் எண்களை கொடுத்து சம்பந்தப்பட்ட கடல் பகுதியில் யாராவது அத்துமீறி குளித்தால் உடனடியாக குறிப்பிட்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளும்படி தெரிவித்தனர்.இதற்காக கடலோர பகுதியில் வசிக்கும் 10 பேர் கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.