தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் மழையோ பெய்யக்கூடும்.