தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார் ஆளுநர் பன்வாரிலால்

தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார் ஆளுநர் பன்வாரிலால்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மஹா புஷ்கர விழா இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஷித் கலந்து கொண்டு புனித நீராடினார்.குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியிலிருந்து தாமிரவருணி நதிக்கான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவதை தொடர்ந்து 144 ஆண்டுகளுக்கு பின் தாமிரவருணி நதியில் மஹா புஷ்கரம் விழா நடத்தப்பட உள்ளது.

சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு தாமிரபரணிக்கு ஆரத்தி வழிபாடுகள் நடத்த‌ ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன.

அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில், தாமிரவருணி தீர்த்தப்படித்துறையிலும் இவ்விழா நடைபெறுகிறது. இன்று முதல் துவங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

இந்த மகா புஷ்கர விழாவில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தும் கலந்து கொண்டார். பாபநாசம் அருகே ராஜராஜேஸ்வரி திருச்சி சுவாமிகள் மண்டபம் படித்துறையில், தாமிரபரணி ஆற்றில் அவர் புனித நீராடினார் பன்வாரிலால்