திருவள்ளுவர் சிலை சேதம் - பா.ஜ.க.வினர் போராட்டம்

திருவள்ளுவர் சிலை சேதம் - பா.ஜ.க.வினர் போராட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் திருவள்ளுவர் சிலை உள்ளது. இன்று காலை இந்த சிலையில் யாரோ சிலர் மர்ம பொருளை வீசியுள்ளனர். இதனால் சிலையின் ஒரு பகுதி சேதமானது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் மாநில பொறுப்பாளர் ராஜபாண்டி தலைமையில் திரண்டு சிலையை கழுவி சுத்தம் செய்தார்கள்.பின்பு சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு தென்கரை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.