சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து நீர் திறப்பு...

சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து நீர் திறப்பு...

சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீரை ஆந்திர அரசு திறந்துவிட்டது.

வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீரைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீரை ஆந்திர அரசு திறந்துவிட்டது.