பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை:  தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 17000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது