காவிரி மேலாண்மை: தீக்குளித்த வைகோ உறவினர் உயிரிழப்பு

காவிரி மேலாண்மை: தீக்குளித்த வைகோ உறவினர் உயிரிழப்பு

மதுரை: கோவில்பட்டியைச் சேர்ந்தவர், சரவணசுரேஷ், 50. வைகோ மனைவி ரேணுகாதேவியின், அண்ணன் மகன். விருதுநகர், எஸ்.பி.ஐ., காலனியில் குடியிருக்கிறார். நேற்று காலை, 7:00 மணிக்கு, மாவட்ட விளையாட்டரங்கம் அருகே காரில் வந்தார்.அங்கு காரை நிறுத்திய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நீட் தேர்வு ரத்து கோரிக்கையை வலியுறுத்தி, உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். போலீசார் மீட்டு, மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிரி சிகிச்சைஅளிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் அது பலனளிக்காமல் உயிரிழந்தார்.