தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, வேலூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும்.கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. செஞ்சி, காவேரிபாக்கம், திருவாடனை தலா 5 செ.மீ, ஜி பஜார் 4 செ.மீ மழை பெய்துள்ளது