8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை  விதித்த ஐகோர்ட்

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை  விதித்த ஐகோர்ட்

சென்னை: சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், திட்டம் குறித்து, அறிக்கையில் முரண்பாடு உள்ளதால், 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், அறிக்கையில் மாற்றம் ஏதும் இல்லை. எட்டு வழிச்சாலையில் மாற்றம் செய்வது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை. இதனால், முடிவெடுக்கும் வரை, நிலம் கையகப்படுத்தும் பணி 2 வார காலம் நிறுத்தி வைப்பதாக கூறினார்.