சென்னை ஹாஸ்டல் வழக்கில் சம்பத்ராஜ் குட்டு வெளிபட்டது எப்படி

சென்னை ஹாஸ்டல் வழக்கில் சம்பத்ராஜ் குட்டு வெளிபட்டது எப்படி

சென்னை: சென்னை பெண்கள் ஹாஸ்டலில், ரகசிய கேமரா கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. சென்னை ஆதம்பாக்கத்தில், சம்பத்ராஜ் என்பவர் தனது வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்களுக்கு தெரியாமல் 6 இடங்களில் கேமரா வைத்து ஆபாச வீடியோக்களை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹாஸ்டல் செயல்பட தொடங்கி 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 7 பெண்கள் அங்கே தங்கியிருந்தனர்.

அவர்களை இவர் ரகசிய கேமராக்களை வைத்து படம் எடுத்துள்ளார்.சமீபத்தில், ஒரு பெண், ஹேர்ட்ரையர் பயன்படுத்துவதற்காக பிளக் சோக்கெட்டை பயன்படுத்தியபோது, உள்ளே கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஹாஸ்டல் பாத்ரூம், பெட்ரூம் என பல இடங்களிலும் ரகசிய கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. .இதையடுத்து ஆதம்பாக்கம் காவல்துறையினரால், சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டார்.